search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்சிகோ எல்லை"

    • கனடா மற்றும் மெக்சிகோ எல்லையில் இருந்து இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.
    • இந்த ஆண்டு கனடா எல்லை வழியாக நுழைய முயன்ற 30 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.

    வாஷிங்டன்:

    கனடா மற்றும் மெக்சிகோ எல்லையில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.

    2020-ம் ஆண்டில் 19,883 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    2021-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்து, 30,662 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 2022-ம் ஆண்டு சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததற்காக 63,927 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டு அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து சுமார் 96,917 இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என அமெரிக்க சுங்க மற்றும் எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.

    இது அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம். 2019-20-ம் ஆண்டு புள்ளி விவரத்துடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிகமாகும்.

    கனடா எல்லை வழியாக நுழைய முயன்ற 30 ஆயிரம் பேரும், மெக்சிகோ எல்லை வழியாக நுழைய முயன்ற 41 ஆயிரம் இதில் அடக்கம் என தெரிவித்துள்ளது.

    • மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிப்பவர்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • ஜோபைடன் பதவி காலத்தில் சட்ட விரோதமாக எல்லையில் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிப்பவர்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் 1,500 பேரை அனுப்ப அதிபர் ஜோபை டன் முடிவு செய்துள்ளார்.

    அவர்களுக்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லை பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டது. ஜோபைடன் பதவி காலத்தில் சட்ட விரோதமாக எல்லையில் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையே அவர், அதிபர் தேர்தலில் 2-வது முறையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் மெக்சிகோ எல்லைக்கு கூடுதல் படையை அனுப்ப ஜோபைடன் முடிவு செய்து உள்ளார்.

    வருகிற 11-ந்தேதியுடன் அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு தினமும் 10 ஆயிரம் பேர் எல்லை வழியே நுழைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் பேட் ரைடர் கூறும்போது, "மெக்சிகோ எல்லைக்கு அனுப்பப்படும் 1,500 வீரர்கள் 90 நாட்களுக்கு பணியமர்த்தப்படுவார்கள். அவர்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணியில் ஈடபடுவார்கள். கைது உள்ளிட்ட சட்ட அமலாக்க நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் நேரடியாக பங்கெடுக்க மாட்டார்கள்" என்றார்.

    அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் செலவின மசோதாக்கள் நிறைவேறின. இதன் மூலம் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #USGovernmentShutdown #Trump
    வாஷிங்டன் :

    அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கனவு திட்டமான அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார்.

    இதற்காக அவர் உள்நாட்டு நிதியில் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும் என்று, அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால் மெக்சிகோ எல்லைச்சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது, அதோடு அந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உறுதியாக உள்ளது.

    இதனால் செலவின மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட செலவின மசோதா, செனட் சபையில் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் ஆதரவை பெற தவறியதால் நிறைவேற்ற முடியாமல் போனது.

    இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் அந்த துறைகள் முடங்கின.

    மெக்சிகோ எல்லை சுவர் விவகாரத்தில் டிரம்புக்கும் ஜனநாயக கட்சியினருக்கும் சமரசம் ஏற்படாததால் அரசு துறைகள் முடக்கம் 2 வாரங்களை கடந்து நீடிக்கிறது.

    இந்த நிலையில், பிரதிநிதிகள் சபையின் புதிய உறுப்பினர்கள் நேற்று முன்தினம் பொறுப்பேற்றனர். இதன் மூலம் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயக கட்சியின் பலம் கூடியது. மேலும் பிரதிநிதிகள் சபையில் தலைவராக ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.



    அதனை தொடர்ந்து அரசுத்துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நிலுவையில் உள்ள 2 செலவின மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அந்த 2 மசோதாக்களிலும் மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

    இந்த மசோதாக்கள் மூலம் பிப்ரவரி 8-ந்தேதி வரை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைக்கும், செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை மற்ற பல அரசுத்துறைகளுக்கும் தேவையான நிதித்தேவை பூர்த்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.

    முதல் மசோதாவுக்கு ஆதரவாக 239 உறுப்பினர்களும், எதிராக 192 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதே போல் 2-வது மசோதாவுக்கு ஆதரவாக 241 ஓட்டுகளும், எதிராக 190 ஓட்டுகளும் பதிவாகின. இதனால் அந்த 2 மசோதாக்களும் பிரதிநிதிகள் சபையில் வெற்றிக்கரமாக நிறைவேறியது.

    இருந்த போதிலும் தற்போது செனட் சபையில் குடியரசு உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அங்கு இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம் என தெரிகிறது. ஒருவேளை செனட் சபையிலும் அந்த மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டால் ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்காக அவை அனுப்பிவைக்கப்படும்.

    அமெரிக்க-மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு நிதி உதவி அளிக்காத எந்த தீர்மானத்தையும் ஏற்கமாட்டேன் என ஏற்கனவே டிரம்ப் தெரிவித்துள்ளார். எனவே இந்த செலவின மசோதாக்கள் 2 சபைகளிலும் நிறைவேறினாலும் கூட தனக்குரிய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் அவற்றை ரத்து செய்துவிடுவார் என தெரிகிறது. இதனால் அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருவது கேள்விக்குறியாகவே உள்ளது. #USGovernmentShutdown #Trump 
    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்த கவுதமாலா நாட்டைச் சேர்ந்த அகதிகளில் 7 வயது சிறுமி ஒருத்தி அமெரிக்க காவலில் இருந்தபோது பரிதாபமாக மரணம் அடைந்தாள்.
    வாஷிங்டன் :

    ஹோண்டுராஸ், கவுதமாலா, எல் சல்வடார் போன்ற மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டில் நிலவுகிற வறுமை, வன்முறை, துன்புறுத்தல் போன்றவற்றின் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

    அவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்து அகதிகளாக தஞ்சம் கேட்க முடியாதபடிக்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாக உத்தரவு போட்டார். ஆனால் அதற்கு, சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டு தடை போட்டது. இருப்பினும் அமெரிக்காவினுள் நுழைகிற மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் கவுதமாலா நாட்டைச் சேர்ந்தவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 வயது சிறுமி ஒருத்தியும், அவளது தந்தையும் அடங்குவர்.

    ஆனால் அந்த சிறுமி அமெரிக்க காவலில் இருந்தபோது பரிதாபமாக மரணம் அடைந்தாள். அவள் பல நாட்களாக உணவோ, தண்ணீரோ கிடைக்காத நிலையில்தான் மரணம் அடைந்திருக்கிறாள் என்ற நெஞ்சை உலுக்கும் தகவலை எல்லை அதிகாரிகள் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

    இருப்பினும் அந்தச் சிறுமியின் மரணம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் முறைப்படி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. இந்த சம்பவம், அகதிகள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.#DonaldTrump #Mexicoborder

    வாஷிங்டன்:

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் ஊடுருவி வருகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டு ராஸ், கவுதமலா மற்றும் எல்கால் வேடர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் நுழைகின்றனர்.

    இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட ஏற்பாடுகள் நடை பெறுகிறது.

    எல்லையில் 5,800 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் 3 ஆயிரம் பேர் மெக்சிகோவில் அமெரிக்க எல்லையில் உள்ள திஜூயானா நகரில் காத்திருக்கின்றனர்.


    இவர்களில் 2,750-க்கும் மேற்பட்டவர்கள் மெக்சிகோவில் தஞ்சம் அடைய மேயர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வரும் வாரங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்வார்கள் என திஜூயானா நகர மேயர் தெரிவித்துள்ளார்.

    மெக்சிகோவில் திஜு யானா நகரில் வெளிநாட்டினர் குவிந்து வருவது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவதை மெக்சிகோ தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடி விடுவோம். மேலும் மெக்சிகோவுடன் ஆன வர்த்தகத்தையும் நிறுத்துவோம். மெக்சிகோவில் தயாரிக்கப்படும் கார்களை அமெரிக்காவில் விற்பனை செய்ய முடியாது’’ என எச்சரிக்கை விடுத்தார். #DonaldTrump #Mexicoborder

    வெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லையில் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். #Trump #MexicoBorder
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவி சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    பெரும்பாலான வெளிநாட்டினர் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவுகின்றனர்.

    அதை தடுக்க மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக எல்லை நெடுகிலும் ராணுவத்தை நிறுத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி கடந்த 31-ந்தேதி (புதன்கிழமை) 5200 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எல்லையில் மேலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட உள்ளனர்.

    மொத்தம் 15 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டு அவர்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே 5200 வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில் மேலும் 8 ஆயிரம் வீரர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மெக்சிகோ எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அவர்கள் அங்கு பணியில் இருக்கும் சுங்க இலாகா மற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு துணையாக செயல்படுவார்கள். இவர்கள் தவிர மீதமுள்ளவர்கள் படிப்படியாக அனுப்பப்படுவார்கள் என ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    இது ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களை விட அதிகம் என்றும் அரசியல் லாபத்துக்காக டிரம்ப் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதை ராணுவ மந்திரி ஜிம் மாத்தீஸ் மறுத்துள்ளார். #Trump #MexicoBorder
    மெக்சிகோவில் இருந்து எல்லை தாண்டி சட்டவிரோதமாக அமெரிக்கா வருபவர்கள் மனிதர்கள் இல்லை விலங்குகள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். #Trump
    வாஷிங்டன்:

    மெக்சிகோவில் இருந்து எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. தீவிர கண்காணிப்பையும் மீறி உள்ளே நுழைபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகின்றனர். இதையும் தாண்டி பலர் அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.

    இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டம் ஒன்றில் அதிபர் டிரம்ப் பேசுகையில், “சட்டவிரோதமாக மக்கள் நாட்டிற்கு வருவதை வர முயற்சிப்பதை நாம் வெகுவாக நிறுத்தி இருக்கிறோம். அப்படி வருபவர்களை  நாட்டை விட்டு வெளியேற்றுகிறோம். இந்த மக்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று நீங்கள் நம்பமாட்டீர்கள். இவர்கள் மக்கள் அல்ல  விலங்குகள்” என கூறினார்.

    மேலும், “ பலவீனமான சட்டங்களின் காரணமாக அவர்கள் நாட்டிற்குள் விரைந்து வருகிறார்கள். நாம் பிடிக்கிறோம், விடுதலை செய்கிறோம் மீண்டும் பிடிக்கிறோம், மீண்டும் அவர்களை விடுதலை செய்கிறோம் இது பைத்தியக்காரத்தனம். முட்டாள்தனமான சட்டங்களால் நாட்டில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரிக்கிறது. அமெரிக்காவிற்கு  சட்டபூர்வமாக மற்றும் தகுதி அடிப்படையில் மக்கள் வர வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறிவர்களை கெட்ட வார்த்தை பயன்படுத்தி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Trump
    ×